14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்!
காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை...
ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்...
பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை
பறைசாற்றி வருகின்றன.
அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால்
இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து
வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது. இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.

No comments:
Post a Comment