Monday, 6 November 2017
Tuesday, 3 October 2017
தமிழன் சாதித்த கட்டிடகலை - வேலூர் -விரிஞ்சிபுரம்- "காலம் காட்டும் கல்"
வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...
அவன் மண்ணை பார்த்து சிந்தித்தபோதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...
அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்...
இந்த கல்கடிகாரத்தை பற்றி சில:
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

Wednesday, 8 February 2017
தமிழன் சாதித்த கட்டிடகலை - ஐராவதேஸ்வரர் கோயில் தாராசுரம்
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில்.
இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில்
அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும்,
நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று
வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில்
கொண்டுள்ளது.
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம்
முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால்
நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே
வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது.
இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில்
சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று
ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும்
சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து
நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.
கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். 2004-ல் ஐராவதேஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)