Friday 6 November 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - சிதம்பரம் நடராசர் கோவில்

சிதம்பரம் நடராசர் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.

பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான்.



உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி:

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.



கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலில் உள்ள 9 துவாரங்களை குறிக்கிறது.

5 எழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் 5 படிகள் உள்ளன.

64 ஆய கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன.

96 தத்துவங்களை குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும்,  4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 5 பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


Wednesday 17 June 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவாசி கோவில்

உங்கள் கையால் தொடலாம் ,உருட்டலாம் ,முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது .கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல .அது ஒரு கலைக்கூடம் .காண்போர் பாக்கியவான்கள் .

திருவாசி -திருச்சி




இதைபோலவே மாணிக்கவாசகரால் பாடபெற்ற உத்தரகோசமங்கையில் ஒருசிங்கத்தில் வாயில் உருளை உள்ளது தொடலாம், உருட்டலாம் ஆனால் வெளியில் எடுக்கமுடியாது


Tuesday 10 March 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவரங்கம்

அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. 



9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.

105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

Friday 16 January 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - வெங்கடரமண பெருமாள் கோவில், செஞ்சி.

தமிழன் சாதித்த கட்டிடகலை - வெங்கடரமண பெருமாள் கோவில், செஞ்சி.