Friday 6 November 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - சிதம்பரம் நடராசர் கோவில்

சிதம்பரம் நடராசர் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.

பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான்.



உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி:

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.



கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலில் உள்ள 9 துவாரங்களை குறிக்கிறது.

5 எழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் 5 படிகள் உள்ளன.

64 ஆய கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன.

96 தத்துவங்களை குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும்,  4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 5 பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment